பயணிகள் கவனத்திற்கு.. இதெற்கெல்லாம் இனி ரயிலில் அனுமதியில்லை – மீறினால் அபராதம் என எச்சரிக்கை!!

0

ரயிலில்  பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில், சத்தம் போட்டு செல்போனில் பேசவும், மிக அதிக ஒலியுடன் பாட்டு கேட்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புது விதிமுறைகள்:

ரயிலில் பயணிகள் பின்பற்ற வேண்டிய புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பயணிகள் தங்கள் பயணத்தின் போது, ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்து புகார் தெரிவித்தால், ரயில்வே போலீசார், டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் தங்களது சக பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் சத்தமாக பாட்டு கேட்கவும், அதிக சத்தம் போட்டு செல்போனில் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது போக, இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் உள்ள விளக்குகளை எரிய விடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை கண்டிப்பாக பயணிகள் பின்பற்ற வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here