விக்கிப்பீடியா பக்கம், என்னை ”இந்திய மாடல் அழகி” என்று மட்டுமே அடையாளப்படுத்துகிறது என குற்றச்சாட்டை வைத்துள்ளார் நடிகை தனுஸ்ரீ தத்தா. இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
தனுஸ்ரீ தத்தா:
தீராத விளையாட்டு பிள்ளை என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் மட்டும் அல்லாமல் ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அந்த பதிவில் விக்கிப்பீடியா பக்கத்தில் என்னை எப்போதும் ”இந்திய மாடல் அழகி” என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் நான் மிஸ் இந்தியா யூனிவர்ஸ் பட்டம் பெற்றுள்ளேன். இதனையும் விக்கிப்பீடியா பக்கத்தில் இணைக்க பல முறை போராடினேன். ஆனால் இதுவரை என்னை இந்திய மாடல் அழகியாக மட்டுமே அடையாளப்படுத்தி வருகிறது. தன் மனதில் இருந்த மன குமுறலை இன்ஸ்டகிராம் பதிவின் மூலமாக கொட்டி தீர்த்துள்ளார். இந்த கோவமான பதிவு சமூக வலை பக்கங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்