பட்டதாரி திரைப்படத்தின் மூலமாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன். இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை என கூறி வந்த நிலையில் தற்போது நீதிமன்றத்தின் உத்தரவால் உண்மை வெளியே புலப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
பட்டதாரி திரைப்படம்:
அதிதி மேனன் மற்றும் அபி சரவணன் 2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி என்னும் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தனர். இந்த திரைப்படத்தின் மூலமாக இருவரும் காதலித்து பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அபி சரவணன் சமூக அக்கறைகளில் ஆர்வம் கொண்டவர்.
ஆனால் அதிதிமேனன் இவரது சமூகத்தின் மீது உள்ள அக்கறை பிடிக்காமல் இவரது மீது எங்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை, அபி சரவணன் பொய்யான சான்றிதழை வைத்து மிரட்டுகிறார் என வழக்கு தொடர்ந்தார். இதற்கு பிறகு அபி சரவணனும் இவளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இவரது திருமண சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது உண்மைதான் என நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனை தொடர்ந்து அபி சரவணன், அதிதி மேனனுக்காக நான் என்றும் காத்து கொண்டிருப்பேன் எனது காதல் உண்மையானதே என கூறியுள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்டு நீதிமன்றத்தில் வாசலில் நிற்பது மிகவும் வேதனையளிக்கிறது எனவும் புலம்பி உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்