இரண்டாவது முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி – அப்போ ஒரு தரமான சம்பவம் இருக்கு போலயே!!

0

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் கொரோனா குமார் என்ற படத்தின் கேமியோ ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தகவல் வெளியீடு :

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி, கடந்த நவம்பர் 25 ஆம் தேதி வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்தின், வெற்றியை அப்படியே தக்க வைக்க பல வித்தியாசமான கேரக்டர்களில் நடிகர் சிம்பு கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து, பிரபல இயக்குனர் கோகுல் என்பவரின் இயக்கத்தில் கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

தற்போது இந்த படத்தில், கேமியோ ரோலில் நடிக்க விஜய் சேதுபதி கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் இருவரும் செக்கச் சிவந்த வானம் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது இவர்கள் மீண்டும் இணைய உள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here