நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக உருவாகி உள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் தற்போது ரிலீஸுக்கு தயாராகி உள்ள படம் தான் டாக்டர். இப்படத்தை கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கி உள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
டாக்டர் படம் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இப்படத்தை குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. பின்னர் இப்படம் ஓடிடியில் வெளியாகுமா அல்லது திரையரங்குகளில் வெளியாகுமா என்ற பெரும் குழப்பமும் பிரச்சனையும் நிலவி வந்தது.
See you in theatres #DoctorFromOct9 ??#Doctor pic.twitter.com/FO3tXWvEvy
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 18, 2021
இந்நிலையில் இன்று, டாக்டர் படம் அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயேனே தன் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்