சிக்கன் 65 கேள்விப்பட்டிருப்பீங்க… சிக்கன் 555 கிரேவி கேள்விப்பட்டிருக்கீங்களா??? இதோ உங்களுக்காக!!!

0
சிக்கன் 65 கேள்விப்பட்டிருப்பீங்க... சிக்கன் 555 கிரேவி கேள்விப்பட்டிருக்கீங்களா??? இதோ உங்களுக்காக!!!
சிக்கன் 65 கேள்விப்பட்டிருப்பீங்க... சிக்கன் 555 கிரேவி கேள்விப்பட்டிருக்கீங்களா??? இதோ உங்களுக்காக!!!

அசைவ பிரியர்களின் முதல் விருப்ப உணவாக இருப்பது சிக்கன். அதிலும் சிக்கன் 65 என்றால் சொல்லும்போதே நாவில் எச்சில் ஊறும். அந்த அளவுக்கு சிக்கன் 65 அனைவரின் பேவரைட் உணவாக இருந்து வருகிறது. இந்நிலையில் நாம் இந்த பதில் அதிகம் அறிந்திராத ஈஸியான செய்முறை கொண்ட சிக்கன் 555 கிரேவி பற்றி தான் காண உள்ளோம்.

தேவையான பொருட்கள்:

போன்லெஸ் சிக்கன் – 1/2 கிலோ

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

கரம் மசாலா – 2 தேக்கரண்டி

சாட் மசாலா – 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

சோள மாவு – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

வெங்காயம் – 1

தக்காளி சாறு – 4 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

தேங்காய் பால் அல்லது பிரெஷ் கிரீம் – 1 கப்

உப்பு -தேவையான அளவு

நெய் அல்லது வெண்ணெய் – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

சிக்கன் 65 கேள்விப்பட்டிருப்பீங்க... சிக்கன் 555 கிரேவி கேள்விப்பட்டிருக்கீங்களா??? இதோ உங்களுக்காக!!!
சிக்கன் 65 கேள்விப்பட்டிருப்பீங்க… சிக்கன் 555 கிரேவி கேள்விப்பட்டிருக்கீங்களா??? இதோ உங்களுக்காக!!!

செய்முறை:

முதலில் சிக்கனில் மிளகாய் தூள்,கரம் மசாலா,இஞ்சி பூண்டு விழுது,சோள மாவு, மஞ்சள் தூள்,சாட் மசாலா, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி கொண்டு அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதன் பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

இதையடுத்து அடுப்பில் இன்னொரு கடாயை வைத்து அதில் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து அதில் சீரகம், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சாறு மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

சிக்கன் 65 கேள்விப்பட்டிருப்பீங்க... சிக்கன் 555 கிரேவி கேள்விப்பட்டிருக்கீங்களா??? இதோ உங்களுக்காக!!!
சிக்கன் 65 கேள்விப்பட்டிருப்பீங்க… சிக்கன் 555 கிரேவி கேள்விப்பட்டிருக்கீங்களா??? இதோ உங்களுக்காக!!!

அதை பின்னர் அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அது கொதித்து வரும் வேளையில் தேங்காய் பால் அல்லது பிரெஷ் கிரீம் சேர்த்து கிளறி கொள்ளவும், அதன் பிறகு அதில் பொரித்து வைத்து உள்ள சிக்கன் துண்டுகளை போட்டு கிரேவி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு இறக்கி விடவும். தற்போது சுவையான மணமிக்க சிக்கன் 555 கிரேவி ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here