ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரிப்பது குறித்து முடிவெடுங்கள் – சர்வதேச சமூகத்திற்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

0
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரிப்பது குறித்து முடிவெடுங்கள் - சர்வதேச சமூகத்திற்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்!!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரிப்பது குறித்து முடிவெடுங்கள் - சர்வதேச சமூகத்திற்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

ஆப்கானில் அமைந்துள்ள தாலிபான் ஆட்சியை அங்கீகரிக்கலாமா என்பது குறித்து சர்வதேச சமூகம் அறிவிக்க வேண்டும் என பாரத பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் அறிவிப்பு:

ஆப்கானை அண்மையில் தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதனை அடுத்து அங்கு தற்காலிக அதிபரை கொண்டு தாலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளனர். இந்த நிலையில், அங்கு தற்போது பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்கு மிக பெரிய அளவில் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் தகவல் வந்துள்ளது. இது போக, உலகின் பல நாடுகள் ஆப்கானுக்கு வழங்கி வந்த பொருளாதார நிதி இணைப்பை துண்டித்து விட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரிப்பது குறித்து முடிவெடுங்கள் - சர்வதேச சமூகத்திற்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்!!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரிப்பது குறித்து முடிவெடுங்கள் – சர்வதேச சமூகத்திற்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

ஆனால், இது குறித்து பேசிய தாலிபான்கள் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அமெரிக்கர்களை நாங்கள் தான் உயிரோடு வெளியே அனுப்பினோம் என்று சர்ச்சை கருத்தை தெரிவித்தனர். இந்நிலையில் இன்று இது குறித்து பேசிய பிரதமர் மோடி முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, தஜிகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 21-வது மாநாட்டில் காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றும், பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரிப்பது குறித்து முடிவெடுங்கள் - சர்வதேச சமூகத்திற்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்!!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரிப்பது குறித்து முடிவெடுங்கள் – சர்வதேச சமூகத்திற்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

ஆப்கானில் சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருவதால் புதிய அரசை அங்கீகரிப்பதா என்பது குறித்து ஒருங்கிணைந்தும், உரிய விவாதங்களுக்குப் பிறகும், சர்வதேச சமூகம் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். நாம் எடுக்க கூடிய முடிவு தீவிரவாத சக்திகளை வேரறுக்க வேண்டுமே தவிர எந்த ஒரு காரணத்திற்காகவும், வன்முறை மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று மற்ற தீவிரவாத அமைப்புகள் நினைத்து விடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here