விஜய் டிவி சீரியல்களில் TRP ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவின் மகள் இனியாவாக நடித்து வருபவர் நேஹா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
சன் டிவி சீரியல்கள் மூலம் சின்னத்திரை சினிமாவுக்குள் வந்தவர் நேஹா. அதாவது பிள்ளை நிலா என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அதை தொடர்ந்து வாணி ராணி, சித்தி 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் அம்மாவை ஏளனமாக நினைக்கும் ஒரு மகளின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சீரியல் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதனால் அவர் பல்வேறு அவமானங்களையும் வேதனைகளையும் சந்தித்தார். மேலும் இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த இவர் சமீபத்தில் தன்னை உருவ கேலி மற்றும் கிண்டல் செய்த பல்லாயிரக்கான இன்ஸ்டா ரசிகர்களை பிளாக் செய்து இனி இப்படி பட்ட வேலையை செய்பவர்களையும் பிளாக் செய்வேன் என எச்சரித்தார்.
View this post on Instagram
இருப்பினும் துவண்டு போகாமல் தனது இன்ஸ்டா மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான திருமலை படத்தில் இடம் பெற்ற அழகூரில் பூத்தவளே… என தொடங்கும் பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்