கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த வீராட் கோலி – கொண்டாடத்தில் ரசிகர்கள்!!!

0

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக  23 ஆயிரம் ரன்களை பெற்ற முதல் வீரர் என்ற சிறப்பை இந்திய அணித் தலைவர் வீராட் கோலி பெற்றுள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் ஒருவர் 490 இன்னிங்சில் 23 ஆயிரம் ரன்களை பெற்றது இதுவே முதல் முறையாகும்.

கிரிக்கெட் போட்டி:

சர்வதேச போட்டிகளில் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்ந்து வருகிறார்.  தற்போது இவரை பிடிக்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் விராட் கோலி பல விருதுகளைப் பெற்றுள்ளார். இதில் இவரின் சிறப்பான பங்களிப்பிற்காக அர்ஜுனா விருது மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 
அதிவேகமான 23,000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் முன்னதாக 645 இன்னிங்சில் ஜெயவர்தனே, 576  இன்னிங்சில் ராகுல் டிராவிட் , 568 இன்னிங்சில் சங்ககரா , 551 இன்னிங்சில் காலிஸ் ,544  இன்னிங்சில் ரிக்கி பாண்டிங் , 522 இன்னிங்சில் சச்சின் டெண்டுல்கர் இருந்தனர். இவர்களை தொடர்ந்து 490 இன்னிங்சில் விராட் கோலி 23,000 ரன்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நேற்று(செப் 2 ) நடந்தது. அந்த போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 490 இன்னிங்சில் விரைவாக 23 ஆயிரம் ரன்களை குவித்த வீரராக விராட்கோலி மாறியுள்ளார். இதில் முதல் இன்னிங்சில் கோலி 50 ரன்கள் அடித்தார். இப்படி சாதனை படைத்த பிறகு இவர் நிச்சயம் சதத்தை நோக்கி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 50 ரன்களோடு ஆட்டமிழந்தார். இதனால் ரசிகர்கள் சிறிது வருத்தப்பட்டிருந்தாலும் அவரின் புதிய சாதனையை கொண்டாடி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here