போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பித்த பெண் – ஒரு எழுத்தால் தலை எழுத்தே மாறிய சம்பவம்!

0

அமெரிக்காவில் போலியான கொரோனா தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பித்த பெண் அந்த நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலியான சான்றிதழ்:

உலகம் முழுவதும் “டெல்டா வகை” வைரஸான கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வந்தது.  இதனை அடுத்து, உலக நாடுகள் அனைத்திலும் போட்டபட்ட பொது முடக்கத்தினாலும், தடுப்பூசிகளின் பயன்பட்டாலும் தொற்றின் தீவிரம் கட்டுப்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் இந்த தொற்றின் தாக்கம் குறையாமலே இருந்து வந்தது.  நாடு முழுவதும் பரவிய இந்த வைரஸ் பல லட்சம் உயிர்களை காவு வாங்கியது.

இதனால், இந்த தொற்றை தடுக்க முடியாமல், வல்லரசு நாடான அமெரிக்கா திணறி வந்தது. இந்த நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட “Moderna” தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு வந்ததை அடுத்து, நாட்டில் தொற்றின் பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அரசு சார்ந்த பணியில் இருப்பவர்கள், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வருபவர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.  இதில், இந்நாட்டின் ஹவாய் நகரைச் சேர்ந்த 24 வயது பெண் போலியான தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பித்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதாவது Moderna என்பதை Maderna  என மாற்றி எழுதி அவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.  இது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 10 நாட்கள் ஹவாய் நகரில் தனிமைப்படுத்துதலை தவிர்க்கவே இந்த செயலை செய்ததாக தெரிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here