சமோசாவில் சீரியல் நம்பரா? – பெங்களூரில் நடந்த வினோதம்!!

0

பெங்களூரில் உள்ள ஒரு கடையில் சீரியல் நம்பர் உள்ள சமோசா தயாரிக்கப்பட்டு, வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீரியல் நம்பர் போட்ட சமோசா:

நம் உண்ணக்கூடிய சிற்றுண்டியில் மிக பெரிய இடத்தைப் பெற்றிருப்பது சமோசா என்பதை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக, வட இந்தியாவில் மக்கள் அதிகமாக சமோசா சாப்பிடுகின்றனர்.  இதில், பல விதமான சமோசாக்கள் உள்ளது. சமோசாவின் உள்ளே வைக்கப்படும் அந்த உருளைக்கிழங்கு மசியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்பது குறிப்பிடத் தகுந்தது.

இந்த நிலையில், பெங்களூரு மற்றும் குர்கானில் இயங்கிவரும் சமோசா விற்பனை செய்யும் கடை ஒன்று, இந்த உணவுப்பொருளில் புது மாற்றத்தை புகுத்தியுள்ளது. அதாவது, தாங்கள் தயார் செய்து வரும் சமோசாவில் சீரியல் நம்பரை  போட்டு விற்பனை செய்து வருகிறது.  இது புது முயற்சியாகவும், வினோதமாகவும் இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்து வந்தனர்.  இருந்தாலும், இது குறித்த காரணம் எதுவும் வெளிவராமலே இருந்து வந்தது.

தற்போது, சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி வந்த இந்த சமோசாவின் புகைப்படத்தை பார்த்து,   அந்த கடை சார்பில் இதற்கான விளக்கம் தரப்பட்டது. அதாவது, அவர்கள் தெரிவிப்பது என்னவென்றால், சமோசாக்களின் வகை குறித்து அறிய இந்த சீரியல் எண் போடப்படுகிறது என்றும், அதிலும் குறிப்பாக சொல்லப் போனால், சைவ மற்றும் அசைவ வகைகள் சார்ந்த சமோசாக்களை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கவே இந்த வினோத முறை கடைபிடிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இதனால், மக்கள் இந்த வித்தியாசமான சமோசாக்களை பார்த்து சமூகவலைத்தளங்களில்  தங்கள் கருத்துக்களை வாரி இறைத்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here