கொரோனா நோயாளிகளை தாக்கும் மாரடைப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

0

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மீண்ட நோயாளிகளை மாரடைப்பு தாக்குவதாக ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் லேன்சட் மருத்துவ இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது.

மனித குலம் கொரோனா என்ற பெயரை கேட்டாலே நடுநடுங்கிப் போய் உள்ளது. இந்த நோய் தொற்று ஏற்பட்டு குணமடைத்தவர்களுக்கு கூட பல பின் பாதிப்புகள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என அடுத்தடுத்து பூஞ்சை தொற்று தாக்கப்பட்டது.

 

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை எடுக்கும் போது உட்கொள்ளப்படும் சில மருந்துகளின் விளைவால் இந்த பூஞ்சை தொற்று ஏற்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் கொரோனாவிற்கு பின் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகளை அமெரிக்காவின் லேன்சட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது. அதில் கொரோனாவுக்கு பிறகு இரண்டு வாரங்களில் மாரடைப்பு, நெஞ்சு வலி போன்ற அறிகுறிகள் காணப்பட்டதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. எனவே தடுப்பூசி போட்டுகொண்டு கொரோனா வராமல் தவிர்க்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here