கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டிருந்தாலும் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் ஷிவாங்கி. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு தனது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பசங்க என்ற தமிழ் படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் அமைந்த அன்பாலே அழகாகும் என்ற பாடலே ஷிவாங்கி பாடிய முதல் திரைப்பட பின்னணி பாடல் ஆகும். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் என்ற இசை போட்டி நிகழ்ச்சி மூலம் திரை முன் தன்னுடைய முகத்தை காட்டினார். அந்த போட்டியிலும் முதல் பத்து இடங்களில் தன்னுடைய பாடல் திறமையால் முன்னேறினார். அதன் பிறகு அவர் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக நுழைந்தார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரின் வெகுளித்தனத்தால் சக போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கவர்ந்தவர். அவர் பேசும் போது வெளிப்படும் குரலால் பல கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான ஷிவாங்கி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அந்த குரலையே தன்னுடைய அடையாளமாக மாற்றி கொண்டார். மேலும் இவர் தற்போது ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் அழகான தோகை விரித்த மயில் போல உள்ள புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் அவரை, பார்பி டால், கியூட் பொம்மை போன்ற வார்த்தைகளால் அவரை வர்ணித்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்