சர்பேட்டா பாண்டியம்மாவாக மாறிய சாக்ஷி அகர்வால்… ஆர்யாவுடன் அசத்தல் டூயட்!!!

0

கட்டுக்கடங்காத கவர்ச்சியில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணற வைத்து வருபவர் சாக்ஷி அகர்வால். இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் சர்பேட்டா படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு அந்த படத்தின் நாயகி பாண்டியம்மா போல மாறி நடனமாடி உள்ளார்.

மிக புகழ் பெற்ற  ஏர் ஏசியா, கல்யாண் சில்க்ஸ்,  மலபார் கோல்டு, சக்தி மசாலா உள்ளிட்ட பல விளம்பர படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். மேலும் இவர் ஒரு சில தமிழ், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரை தமிழ் மக்களுக்கு  மிகுந்த அளவில் அறிய வைத்தது பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ தான். இந்த ஷோ மூலம் தமிழ் மக்கள் மற்றும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். அந்த பிறகு தனது ரசிகர்களை மகிழ்விக்க தன்னுடைய பல புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர், சமீபத்தில் வெளியாகி மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஆர்யா நடிப்பில் வெளியான சர்பேட்டா படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு படத்தின் நாயகி பாண்டியம்மா போல் உடை அணிந்து, ஒரு ஃபிரேமில் ஆர்யா மற்றொரு ஃபிரேமில் சாக்ஷி என ஒரு டூயட் போல  நடனமாடி உள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி  வருகிறது.


ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here