யாஷிகா விபத்தில் சிக்கிய CCTV வீடியோ.. துடிதுடித்து இறந்த தோழி பவானி.. கண்கலங்க வைத்த காட்சிகள்!!

0

நடிகை யாஷிகா ஆனந்த் சனிக்கிழமை இரவு மிக மோசமான விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு சென்று சென்னை திரும்பியபோது இரவு 11.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய இந்த சம்பவத்தின் CCTV காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளது.

மாமல்லபுரம் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே யாஷிகாவின் தோழி பவானி என்பவர் உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த யாஷிகா, அவரின் ஆண் நண்பர்கள் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது இந்த விபத்தின் CCTV காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் யாஷிகா கார் ஒட்டி வருவது ரொம்ப தெளிவாக தெரிந்துள்ளது. மேலும் அதிவகமாக வந்த கார் சாலையின் மீது உள்ள தடுப்பின் மீது வேகமாக மோதியதால் பவானி காரில் இருந்து சில தொலைவிற்கு தூக்கி எறியப்பட்டுள்ளார். இது அனைத்தும் CCTV காட்சிகளில் பத்திவாகியுள்ளது.

கார் விபத்துக்குள்ளானதை பார்த்த பொதுமக்கள் யாஷிகா, அவரின் நண்பர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். ஆனால் தூக்கி எறியப்பட்ட பவானி பற்றி யாருக்கும் அப்போது தெரியவில்லை. சில மணி நேரங்கள் கழித்து விபத்து நடந்த பகுதியில் இருந்து சில தொலைவில் ரத்தம் சொட்ட சொட்ட பெருமூச்சு வாங்கிய நிலையில் பவானி கிடப்பது தெரியவந்துள்ளது.

மருத்துவமனைக்குள் அனுமதிபதற்குள் பவானி இறந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள யாஷிகாவிற்கு அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டிருப்பதாக அவர் தங்கை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here