வாரத்தில் 2 நாட்கள் அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகள் அணிய வேண்டும் – தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்!!!

0

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கைத்தறி, துணிநூல், கதர் துறையின் ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய போது வாரத்தில் இரண்டு நாட்கள் அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகள் அணிவதை நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுருத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு அளிப்பது மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் நெசவாளர்களுக்குச் உரிய நேரத்தில் சென்றடைய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெசவாளர்களின் வருமானத்தையும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அரசின் நலத்திட்டங்கள் அமைய வேண்டும் மற்றும் தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிகப் பெயரை உருவாக்கி நடைமுறைப்படுத்த முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.  குறிப்பாக அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகளை உடுத்த முதல்வர் அறிவுருத்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here