சென்ற வாராத்திக்கான TRP ரேட்டிங்கை BARC வெளியிட்டுள்ளது. பல வருடங்களாக சன் டீவியும், விஜய் டீவியும் முதல் இரண்டு இடங்களை மாறி மாறி தக்கவைத்து கொள்ளும். ஆனால் கடந்த சில வாரங்களாக விஜய் டிவி இரண்டாம் இடத்திலேயே மாற்றம் இல்லாமல் தொடர்ந்து நீடிக்கிறது. அதே போல சென்ற வாரமும் விஜய் டிவியை பின்னுக்கு தள்ளி சன் டிவி முதலிடத்தை பிடித்துள்ளது.
வெள்ளித்திரைக்கு இருப்பது போலவே சின்ன திரைக்கும் ஒரு பெரிய ரசிகர் வட்டாரமே உள்ளது. சின்னத்திரையில் வட்டாரங்களில் தற்போது பெரிதும் பேசப்பட்டு வருவது TRP ரேட்டிங் பற்றி தான். அதனை எதிர்பார்த்து ரசிகர்கள் கூட ஒவ்வொரு வாரமும் காத்துகொண்டு இருக்கின்றனர். பார்க் இந்தியா நிறுவனம், ஒவ்வொரு வாரமும் இந்த TRP ரேட்டிங்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் சென்ற வாரத்தின் TRP ரேட்டிங் குறித்து பார்க் இந்தியா நிறுவனம் லிஸ்ட் வெளியிட்டுள்ளது. இந்த ரேட்டிங் லிஸ்டில் சன் டிவி முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை விஜய் டிவியும், மூன்றாம் இடத்தை கே டிவியும் பிடித்துள்ளன. ஜீ தமிழ் மற்றும் ஸ்டார் விஜய் சூப்பர் சேனல்கள் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களை பிடித்துள்ளன. என்னதான் போட்டா போட்டி போட்டுக்கொண்டு வித வித நிகழ்ச்சிகளை பிற சேனல்கள் ரசிங்கர்களுக்கு வழங்கினாலும் சன் டிவி இடத்தை இன்னும் மற்ற சேனல்களால் எட்ட முடியவில்லை என்பது இந்த வாரமும் உறுதியாகி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்