‘நாக்கு மூக்கா’பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலங்கள்…!வைரல் வீடியோ உள்ளே!!!

0

விஜய் டிவியில்  பிரமாண்டமாக ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் மூலம் திரையில் பிரபலம் ஆனவர்கள் பலர். அப்படி பிரபலம் அடைந்தவர்களுள் ஒருவர்  தான் சம்யுக்தா. இவர் தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜித்தன் பட புகழ் ஜித்தன் ரமேஷுக்கு ஜோடியாக உள்ளார். இவர்கள் இருவரும் ‘நாக்கு மூக்கா’  என்ற பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

 

மாடலிங் துறை மூலம் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் சம்யுக்தா. அதிலும் வெற்றி கண்டு  உள்ளார். இந்த  துறையில் பல சாதனைகளை படைத்து, மாடலிங் துறையில் மிக பிரபலம் ஆனவர். மேலும் ஒரு சில படங்கள் மற்றும் ஒரு சில சீரியல்களிலும் நடித்து உள்ளார். மேலும் இவர் ஒரு பிரபல தொழிலதிபர் ஆவார். சம்யுக்தா, 2017 ஆம் ஆண்டு  ‘மிஸ் சென்னை’ பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  மக்கள் அனைவர் மத்தியிலும் மிக பரிச்சியம் ஆனார்.

 

பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்திரியின் மகன் தான் ரமேஷ் சௌத்ரி. இவர் ஜித்தன் படத்தில் நடித்ததன் மூலம் ஜித்தன் ரமேஷ் என அழைக்கபட்டார். மேலும் அதை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் அவருக்கு அந்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு மீண்டும் தன் முகத்தை மக்கள் மனதில் பதிய வைத்தார்.

 

தற்போது விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் ஜோடிகள். இந்த நிகழ்ச்சி இதுவரை தமிழில் நடைபெற்ற பிக் பாஸ் போட்டியாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு நடன போட்டியாகும். இந்த போட்டியில் ஜித்தன் ரமேஷ்க்கு ஜோடியாக சமுயுக்தா இணைந்து உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிகர் நகுல் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் படத்தில் உள்ள ‘நாக்கு மூக்கா’ பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here