பாரதி கண்ணம்மா சீரியலில் பிரபலமாக நடித்து வரும் ஹேமா தற்போது மாஸ்டர் படத்தில் நடித்த முக்கிய பிரபலத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா ஹேமா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஹேமா கதாபாத்திரத்தில் நடித்து வரும் லிசா பல ஜீ தமிழில் இருந்து வந்தவர். இவர் ஆரம்பத்தில் ஜீ தமிழ் ஒளிபரப்பான லிட்டில் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
அந்த சிறு வயதிலேயே தேர்ந்த நடிப்பால் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். எந்த ஒரு கதாபாத்திரம் என்றாலும் எளிதில் நடிக்கும் திறமை படைத்தவர். அதன் பிறகு ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து பிரபலமானார்.
தற்போது வரை ருத்ராவாக மக்கள் மனதில் நிறைந்துள்ளார். அதனால் தான் பாரதி கண்ணம்மா சீரியலில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஹேமா கதாபாத்திரத்தில் அருமையாக தனது நடிப்பை காட்டி இருப்பார். தற்போது இவரை வைத்து தான் கதை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் 96 மற்றும் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தா கௌரி கிஷன் உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.