தமிழகத்தில் பாஜாக தலைவர்கள் நீட் தேர்வு விவகாரத்தில் இரட்டை நிலைபாடா ?

0
தமிழகத்தில் பாஜாக தலைவர்கள் நீட் தேர்வு விவகாரத்தில் இரட்டை நிலைபாடா ?
தமிழகத்தில் பாஜாக தலைவர்கள் நீட் தேர்வு விவகாரத்தில் இரட்டை நிலைபாடா ?

தமிழக அமைச்சர் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாஜக நீட் தேர்வு விவகாரத்தில் ரெட்டை வேடம் போடுகிறது என்று கூறியுள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாஜகவை தலைவர்களை விமர்சித்தார்.

தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் முக்கியமான ஒன்று நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்பதே. அதனை தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து அரசு, ஜூன் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.மேலும் அந்த அரசாணையில் நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாஜகவை விமர்சித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாஜகவை தலைவர்களை விமர்சித்தார்.

பாஜக சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன், அவர்கள் தமிழக அரசின் நீட் விவகாரத்தில் துணை நிற்போம் என சட்டப்பேரவையில் தெரிவித்து இருந்தார். அனால் தற்போது இந்த தமிழக அரசு நீட் தேர்வு குறித்து அறிவித்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.இந்த செயல்குறித்து தமிழக அமைச்சர் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூறுகையில் ‘நீட் விவகாரத்தில் பாஜக இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும் பாஜக தங்கள் முழு சுயரூபத்தை வெளியில் காட்டியுள்ளது எனவும் விமர்சித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here