கௌதமி இடத்தை பிடிக்க போகும் நடிகை இவர்தானாம் …! – பாபநாசம் – 2 படத்தில் சேரும் புதிய ஜோடி !!!

0

திரிஷ்யம்  படத்தின் தமிழ் ரீமேக் தான் பாபநாசம் படம் ஆகும். இந்த படம் மலையாளம் , தமிழ் என இரண்டு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இதன்  இரண்டாம் பாகம் அதாவது  திரிஷ்யம் -2 சமீபத்தில் வெளியாகி வெற்றி கண்டது. அந்த வகையில் அதன் தமிழ் ரீமேக் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில் அதில்  கௌதமிக்கு பதிலாக  கமலுக்கு ஜோடியாக பிரபல நடிகை நதியா நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளன.

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் உருவான படம்   திரிஷ்யம்  . இது தமிழில் கமல் மற்றும் கௌதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த இரு மொழிகளில் சக்க போடு போட்ட இந்த படம் தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் ரீமேக்  செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நொடிக்கு நொடி விறுவிறுப்புடன் நகரும் இதன் கதை பார்ப்பவரை பதற்றத்தின் எல்லைக்கே தள்ளிவிடும்.

இதனிடையே இந்த படத்தின் இரண்டாம் பாகம் திரிஷ்யம் 2 சமீபத்தில் மலையாள மொழியில் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த பாகமும் மிகுந்த வெற்றி பெற்றதை அடுத்து அதன் தமிழ் ரீமேக் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தன. இந்நிலையில் இந்த படத்திற்கு கமல் தரப்பில் கிரீன் சிக்னல் கிடைத்தது.

மேலும் முதல் பாகத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த கௌதமி இந்த படத்தில் நடிக்க மாட்டார் என்பதால் அவரின் ஜோடி பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கமலுக்கு ஜோடியாக பிரபல நடிகை நதியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டிய மேயானால் பாபநாசம் – 2 படத்தில் கமல் – நதியா ஜோடி இணைவர். மேலும் இந்த ஜோடி இணைந்து நடிக்கும் முதல்  நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here