என்னோட சம்பளம் இதான்.. வரி செலுத்துவதை ஊக்குவிக்க தகவல்களை வெளியிட்ட குடியரசு தலைவர்!!!

0

என்னுடைய மாத சம்பளம் ரூ.5 லட்சம், அதில் நான் ரூ.2.75 லட்சத்தை வரியாக செலுத்துகிறேன் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், 3 நாள் பயணமாக உத்தர பிரதேசம் சென்றுள்ளார். அப்போது அம்மாநிலத்தில் உள்ள தேஹத் மாவட்டத்தில் பராங்கு கிராமம் உள்ளது. இந்த கிராமம் தான் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களின் சொந்த ஊர்.  அங்கு உரையாற்றும் போது  குடியரசு தலைவர் நாட்டுமக்கள் வரி செலுத்துவதிலிருந்து தவறக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

அவர் அந்த உரையில், “என்னுடைய சம்பளம் ரூ.5 லட்சம். அதில் நான் வரியாக 2.75 செலுத்துகிறேன். எல்லோரும் குடியரசு தலைவரின் சம்பளம் பற்றி விவாதிக்கின்றனர். ஆனால் அதிகாரிகள், ஆசிரியர்கள் நான் சேமிப்பதை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சிக்காக அனைவரும் வரி செலுத்தவேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அவர், “ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த ஏழை சிறுவன் இந்த நாட்டின் அதிக பொறுப்பு மிக்க குடியரசு பதவியை வகிப்பேன் என்று நான் நினைத்து கூட பார்த்தது இல்லை. இது சாத்தியமானத்துக்கு காரணம் இந்திய நாட்டின் ஜனநாயகமே ஆகும்” என்று அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here