90ஸ் வரப்பிரசாதமாக மீண்டும் களமிறங்கும் கனா காணும் காலங்கள் 2 – அதிரடியாக வெளியாகிய ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!!

0

சின்னத்திரை உலகில் 90ஸ் களின் வரப்பிரசாதமாக களமிறங்கிய,ரசிகர்களின் பேவரைட் ஷோவான கனா காணும் காலங்கள் தொடரின் சீசன் 2 மீண்டும் படப்பிடிப்புடன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

கனா காணும் காலங்கள் 2 :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சீரியல்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். அந்த அளவிற்கு,மக்கள் மனதில் அழிக்க முடியாத இடத்தை பெற்ற தொடர் கனா காணும் காலங்கள். 90ஸ் களின் பேவரைட் ஷோவாக இருந்த இந்த தொடரின், ரீயூனியன் விழா அண்மையில் நடைபெற்றது.

விஜய் டிவியின் டிஆர்பியை எகிற வைத்த இந்த நிகழ்ச்சியின், சீசன் 2 விரைவில் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது தயாராகி வருகிறது. இதன் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும், அதிகப்படுத்தியுள்ளது. இந்த தொடரின் முதல் சீசன் விஜய் டிவியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி நிறைவுற்றது. இதன், இரண்டாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகாது என்றும் வேறு ஒரு பிரபல சேனலில் ஒளிபரப்பாகும் எனவும் வதந்திகள் வருகின்றது. ஏற்கனவே, இந்த தொடரில் வெற்றி பாத்திரத்தில் நடித்த நடிகரும், அழகு சீரியலில் வில்லி யாக நடித்த மலரும் இணைந்து நடிக்க உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here