கொரோனாவால் மூடப்பட்ட 70 ஆண்டுகால பழமை வாய்ந்த நிறுவனம்

0

கொரோனா தொற்றின் தாக்கத்தினால் 70 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வந்த விட்கோ நிறுவனம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வந்ததால் நிறுவனம் மூடப்பட்டது..

விட்கோ நிறுவனம்:

கொரோனா தொற்றின் தாக்கத்தினால் உலகம் முழுவவதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு நோய்த்தொற்று பரவாமல் இருக்கவும் இறப்பு விகிதத்தை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட நிலையில் மக்கள் கடும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியா கடுமையான பொருளாதார பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் பல முன்னணி நிறுவனங்களும் பாதிப்படைந்துள்ளது.விட்கோ 1951 ஆம் ஆண்டில் வெஸ்ட் இந்தியா பிளாஸ்டிக் டிரேடிங் கோ என்ற பெயரில் சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுனில் 500 சதுர அடி கடையில் தொடங்கியது.

சென்னையைச் சேர்ந்த மிகப் பழமையான சில்லறை பிராண்டுகளில் ஒன்றான விட்கோ பிரைவேட் லிமிடெட் கொரோனா தாக்கத்தினால் வணிகத்தை மூடிவிட்டோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். 70 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வந்த நிறுவனம் தற்போது கொரோனா தொற்றின் காரணமாக நிறுவனம் மூடப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here