மத்திய அரசை முந்தியது ரிசர்வ் வங்கி… ரூ. 30000 கோடி ஊக்க திட்டம்!!!

0

பெருந்தொற்று காரணமாக நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் சொல்ல முடியாத அளவுக்கு  பாதிப்பை எதிர்கொண்டு.  உள்ளது இந்நிலையில்  மத்திய அரசு ஊக்கத் திட்டம் ஏதேனும்  அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நாட்டின் மிக மோசமான வர்த்தக நிலையை அறிந்த  ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு முன்னதாகவே  30000 ரூபாய் கோடி ஊக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதாவது இன்று நடைபெற்ற இரு மாத நாணயக் கொள்கை கூட்டத்தின் முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர்  வெளியிட்டார். இதில் ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமின்றி தொடரும் எனவும்   நாட்டின் வர்த்தகத்தை மேம்படுத்த  கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிதியுதவி வழங்கும் விதத்தில் சுமார் 30000 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டான 2021-22 இல் நாட்டின் பொருளாதாரம் 9.5 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பை 10.5 சதவீதத்திலிருந்து ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

கொரோனா காலத்தில்  மக்கள் நேரில் சென்று பொருட்கள் அல்லது சேவை பெறும் துறைகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் இப்படிப்பட்ட துறைகளுக்கு 15,000 கோடி ரூபாய் அளவிலான கடனுதவியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தத் தொகையை வங்கிகள் வாயிலாக வட்டி தளர்வுகளுடன்  கடன் அளிக்க ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.இந்த அறிவிப்பின் வாயிலாக ஹோட்டல், ஸ்பா, ஆட்டோ மொபைல் சேவை நிறுவனங்கள், உணவகம் போன்ற அனைத்து நிறுவனங்கள் கடனை பெறலாம்.

மேலும் உற்பத்தித் துறையில் உள்ள  SME நிறுவனங்களுக்கு உதவிடும் நோக்கில்  16,500 கோடி ரூபாய் அளவிலான தொகையை SIDBI மூலம் சந்தைக்குக் வழங்க உள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார். பணவீக்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருந்த நிலையில், இப்பொழுது  கொரோனா தொற்று உடன் தொடர்புடையதாக மாறியுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனை குறைக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here