தேசிய விருது நாயகன் ஆவாரா நடிகர் சூர்யா – இன்று மாலை வெளியாகும் சூப்பர் அறிவிப்பு!

0
ரோலக்ஸ் கேரக்டரை மீண்டும் கையிலெடுக்கும் சூர்யா -  பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் கிடைத்த வாய்ப்பு!!

டெல்லியில் இன்று (22-07-2022) மாலை 4 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் யார் யார் தேசிய விருதை வாங்க போகிறார்கள் என்ற பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது.

தேசிய விருது:

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் வெளியான சிறந்த படங்களை தேர்வு செய்து அதற்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் தேசிய விருது கொடுப்பது வழக்கத்தில் ஒன்று. இதுவரை 67 தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த் விருதுக்கு சென்சார் போர்டு சான்றிதழ் பெற்றால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெருவாரியான படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. இருப்பினும் அப்படங்களுக்கும் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் சூர்யா நடித்த சூரரைப் போற்று மற்றும் விஜய் சேதுபதி நடித்த க.பெ.ரணசிங்கம் ஆகிய படங்களில் தேசிய விருதுக்கு விண்ணப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு தேசிய விருதை வென்றவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது.

மேலும் பலரால் கொண்டாடப்பட்ட சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகராக சூர்யாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என்று அவர் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு நாளை பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சூர்யா தேசிய விருதை வென்றால் அது அவருக்கு சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here