தமிழ் ரசிகர்களுக்கு சின்னத்திரை மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் ஒரு செய்தி தொகுப்பளராகவும், சீரியல் நடிகையாகவும் தன் திரைப்பயணத்தை தொடங்கினார். பின்னர் சினிமாவில் மாபியா, கடைக்குட்டி சிங்கம், பிளட் மனி ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது தன் சினிமா பயணத்தை விரிவுபடுத்தி டோலிவுட்டிலும் தன் கால் தடத்தை பதித்துள்ளார் பிரியா. இந்நிலையில் ரசிகர்களுக்கு பிரியா பவானி சங்கர் ஒரு அட்வைஸ் செய்துள்ளார். சமூக வலைதளங்களில் நீங்கள் பார்ப்பது எல்லாம் பிறரது பயணங்கள், விருந்து நிகழ்ச்சிகள், வெற்றிகள் போன்ற நல்ல விஷயங்களை மட்டும் தான்.
ஆனால் வலிகள் அனைத்தும் பதிவு செய்யப்படுவது இல்லை. அதனால் நீங்கள் வாழ்க்கையில் மிகவும் பின்தங்கி விட்டதாகவும் நினைக்க வேண்டாம். உண்மையான வாழ்க்கை அந்த புகைப்படங்களுக்கு பின்னால் தான் ஒளிந்து இருக்கிறது” என அட்வைஸ் செய்து உள்ளார். இவரின் இந்த அறிவுரை ரசிகர்களின் பாசிட்டிவ் கமெண்டுகளை பெற்று வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்