தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் 68 லட்சம் பேர் – ஒருநாள் விடியும் என நம்பிக்கை..!

0

தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் எண்ணிக்கை 68 லட்சத்தை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 58 வயதைக் கடந்தும் அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

3 வருடத்திற்கு ஒருமுறை..!

தமிழகத்தில் 10, 12 மற்றும் கல்லூரி பட்டப்படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்து கொள்வது வழக்கம். பதிவு செய்துள்ளோர் தங்களுடைய படிப்புத் தகுதியை 3 ஆண்டுக்கு ஒருமுறை தங்களது படிப்பினை அப்டேட் செய்து கொள்ளும் வசதி உள்ளது. தவறும் பட்சத்தில் 12 மாதங்கள் வரை சலுகைகள் வழங்கப்படும்.

எவ்வளவு பேர்..?

2019ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் எண்ணிக்கை 68 லட்சத்தை தொட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் குறிப்பிட்ட வயதுடையவர்கள் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த விபரங்களும் வெளியிடப்பட்டு உள்ளது.

18 வயதுக்கு உட்பட்டவர்கள் – 17,59,474 பேர்
19 முதல் 23 வயதுடையவர்கள் – 13,55,685 பேர்
24 முதல் 35 வயதுடையவர்கள் – 25,55,160 பேர்

இதில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் 36 முதல் 57 வயதுக்கு உட்பட்டவர்கள் 11,29,472 பேரும், 58 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7,648 பேர் பதிவு செய்தும் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.

மாற்றுத்திறனாளி பெண்கள் – 44,997 பேர்
மாற்றுத்திறனாளி ஆண்கள் – 86,662 பேர்

என தமிழகத்தில் மொத்தம் 68 லட்சம் பேர் வரை வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்து ஒரு நாள் தங்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உடன் காத்திருக்கின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here