கல்வி கற்க வயது தடையில்லையேப்பா.., பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மூதாட்டி!!

0
கல்வி கற்க வயது தடையில்லையேப்பா.., பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மூதாட்டி!!
கல்வி கற்க வயது தடையில்லையேப்பா.., பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மூதாட்டி!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிலையில் மே மாதம் ரிசல்ட் வெளியானது. இந்நிலையில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 50 வயது மூதாட்டி ஏழுதியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்தவர் தான் ராஹிலா பானு. அவருக்கு வயது 52. இவர் கடந்த 1989ம் ஆண்டு 9ம் வகுப்பு படித்த போது குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்தியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அப்போது அவருடைய படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மண்ணோடு மண்ணாய் போனது. இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு சாகுல் ஹமீது என்ற மகன் உள்ளார். மேலும் இவர் கடந்த 12 ஆண்டுகளாக அரசு பள்ளியில் சத்துணவு கூடத்தில் சமையலராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது, சத்துணவு அமைப்பாளராக வேண்டும் என்ற ஆர்வத்தில் பதவி உயர்வுக்கு முயற்சி செய்து வருகிறார்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் தான் சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு தகுதி பெற முடியும் என்பதால் நடப்பாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 5 பாடங்களுக்கு தேர்வு எழுதி இருந்தார். இதில், ஆங்கிலம், சமூக அறிவியல் என இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

மாணவர்கள் கவனத்திற்கு .., நாளை விடுமுறை.., வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!!

மீதமுள்ள 3 பாடங்களில் தற்போது நடைபெற்று வரும் துணைத்தேர்வில் தேர்வு எழுதி வருகிறார். இன்று நடந்த அறிவியல் தேர்வில் கலந்து கொண்ட போது தனது மகன் சாகுல் ஹமீது எனக்கு பாடம் சொல்லி கொடுத்து தேர்வு நுழைவு சீட்டு விண்ணப்பித்து கொடுத்ததாகவும் நெகிழ்ச்சியுடன் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here