இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்றால் 5 ஆண்டுகள் சிறை – கொரோனா நோய்பரவல் எதிரொலி!!

0
கன்னி பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஏர் இந்தியா விமானம்.., பரிதவித்துப்போன குடும்பம்!!
கன்னி பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஏர் இந்தியா விமானம்.., பரிதவித்துப்போன குடும்பம்!!

உலகம் முழுவதும் கொரோன நோய்பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக தற்போது அனைத்து உலக நாட்டிலும் இந்தியாவிற்கு இடையேயான விமான போக்குவரத்து சேவையை தடை செய்யப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்து:

அனைத்து உலக நாட்டிலும் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து உலக நாட்டு சுகாதாரத்துறையினரும் அயராது தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி பல உலக நாடுகளில் தற்போது இந்தியாவிற்கு இடையேயான விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம் தற்போது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமான அளவில் இருந்து வருகிறது. இதனால் அனைத்து உலக நாட்டிலும் பாதுகாப்பு நடவடிக்கையாக இதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவிலும் இந்திய விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்பவர்கள் தற்போது வேறு நாடுகளுக்கு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா சென்று வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கூட ஐபிஎல் தொடருக்காக இந்தியாவிற்கு வந்த ஜாம்பா, ரிச்சர்ட்ஸன் ஆகியோர் வேறு நாடுகள் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்தனர். இதனால் கொரோனா அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – பலி எண்ணிக்கை 3,523 ஆக உயர்வு!!

இந்நிலையில் இந்தியாவில் இருந்து சொந்த நாட்டு மக்களே ஆஸ்திரேலியாவிற்கு திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வேறு நாடுகள் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு சென்றால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.66 ஆயிரம் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மிக கடுமையாக எச்சரித்துள்ளது அந்நாட்டு அரசு. இந்த நடவடிக்கை வருகிற மே மாதம் 3ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here