
தமிழகத்தின் அரசு பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப TN TRB தேர்வாணையம் போட்டி தேர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 2 ஆயிரத்து 222 பட்டதாரி ஆசிரியர் பணியிட தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. மேலும் அதில் விண்ணப்பிப்பதற்கான தகுதி வரம்பையும் தேர்வாணையம் வெளியிட்டது.
தற்போது இதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் இதில் 400 இடங்களை காலியாக வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மட்டுமல்லாமல் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ந்து வழக்கில் பள்ளி கல்வித்துறை துறையின் முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார்.