
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து விடாமல் கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக கடந்த மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்ததில் இருந்து சில முக்கிய மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென் மேற்கு பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணத்தால் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரி கனமழை பெய்ய கூடும். மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.