தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் அதிக அளவிலான மழைப்பொழிவு இருந்து வருகிறது. அதிலும் சென்னையில் ஆண்டுதோறும் இக்காலங்களில் முக்கிய பகுதிகள் பலவற்றிலும் மழைநீர் வெள்ளம் போல் காட்சி அளிக்கும். இதனை கருத்தில் கொண்டு மழைநீர் தேங்கி நிற்காத வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
ராகவா லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டிரைலர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கழிவுநீர் குழாய்கள், இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 23,000 ஊழியர்கள் பணியமர்த்த பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இவர்கள் சரியான முறையில் பணியாற்றவில்லை என தெரிய வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.