தமிழகத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி – உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசு உத்தரவு!

0
தமிழகத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி - உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசு உத்தரவு!
தமிழகத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி - உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசு உத்தரவு!

செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை முன்னிட்டு வருகிற ஜூலை 28-ம் தேதி நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் இ.வ வேலு அறிவித்தார்.

பட்டப்பகலில் இளம்பெண்ணை கற்பழித்த 4 ரயில்வே ஊழியர்கள் – டெல்லியில் நடந்த பகிர் சம்பவம்!

செஸ் ஒலிம்பியாட் போட்டி:

வரலாற்றில் முதன்முறையாக தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்கு 188 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு புத்துணர்ச்சி தரும் விதமாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து ஒரு விளம்பரத்தில் நடித்து அதை அண்மையில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி - உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசு உத்தரவு!
தமிழகத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி – உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசு உத்தரவு!

மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் தேவையான வசதிகளை செய்து தரும்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இப்போட்டியின் தொடக்க விழா ஜூலை 28 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு ஜூலை 28 அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் இ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here