நியாய விலை கடைகளில் இனி ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் – மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!

0
நியாய விலை கடைகளில் இனி ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் - மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!

அந்தியோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கடைகளில் ஆண்டுக்கு மூன்று இலவச எரிவாயு சிலிண்டர்களை வழங்கவுள்ளதாக உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது

இலவச சிலிண்டர்:

இந்தியா முழுவதும் வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு மாதம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இது வீட்டு இல்லத்தரசிகளுக்கு தொடர்ந்து வருத்தத்தை தருகிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில அரசு மக்களுக்கு உதவும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது அந்தியோதயா திட்டத்தில் இணைந்து உள்ளவர்களுக்கு மட்டும் ஆண்டுதோறும் மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இலவச LPG சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது. அதாவது இந்த திட்டத்தில் பயன் பெற, உத்தரகாண்ட் மாநிலத்தில் வாழ்பவராகவும், அந்தியோதயா ரேஷன் அட்டை வைத்திருப்பவராகவும் இருக்கவேண்டும். மேலும் அந்தியோதயா ரேஷன் அட்டை சிலிண்டர் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

75-வது சுதந்திர தின விழா கொண்டாடட்டம் – 2 ஆண்டுகளுக்கு பின் பொது மக்களுக்கு அனுமதி!

குறிப்பாக இந்த திட்டத்தை பெற விரும்புவர்கள் ஆதார் அட்டையை அந்தியோதயா அட்டையுடன் இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here