விசா இல்லாமல் 29 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்…,  வெளியான மாஸ் அப்டேட்!!

0
விசா இல்லாமல் 29 நாடுகளுக்கு இந்தியர்கள் செல்லலாம்...,  வெளியான மாஸ் அப்டேட்!!

உலக முழுவதும் உள்ள ஒவ்வொரு நாடும், தங்களது நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தங்களது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையை ரத்து செய்து வருகின்றனர். இதன்படி, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் சுமார் 29 நாடுகள் குறிப்பிட்ட நாட்கள் வரை விசா தேவையை ரத்து செய்துள்ளது.

அதாவது,

  • இலங்கை, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், தைவான், வனுவாடு, மைக்ரோனேஷியா, மக்காவ், காபோன், அங்கோலா ஆகிய நாடுகளுக்கு 30 நாட்கள் வரை விசா இல்லாமல் இந்தியர்கள் செல்லலாம்.
  • குக் தீவுகள், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், டிரினிடாட் மற்றும் டொபாகோ, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், செனகல், செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், மொரிஷியஸ், ஹைட்டி, கிரெனடா, காம்பியா, எல் சால்வடார், பார்படாஸ் ஆகிய நாடுகளுக்கு 90 நாட்கள் வரை விசா இல்லாமல் இந்தியர்கள் செல்லலாம்.
  • பூட்டான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 14 நாட்களும், பிஜி நாட்டுக்கு 120 நாட்களும், டொமினிகாவும் 180 நாட்களும், ஜமைக்கா, நேபாளம், பாலஸ்தீனிய பிரதேசங்களுக்கு விசா தேவை இல்லாமல் பயணிக்கலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

மதுபிரியர்களுக்கு நற்செய்தி., சவுதி அரேபியாவில் மதுபான கடை திறப்பு., அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here