தமிழக அரசானது பொது மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள், திருவிழாக்கள், தலைவர்கள் தினம் போன்றவற்றை மக்கள் கொண்டாடி மகிழ அவர்களின் வசதிக்கேற்ப உள்ளூர் விடுமுறையை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்த வருகிறார்.

அதன்படி தற்போது திருவாரூர் மாவட்டத்தில் வரும் நவம்பர் 24 ஆம் தேதி சந்தனக்கூடு விழா அரங்கேற உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் முழுவதும் திருவிழாவை கொண்டாடி மகிழ திருவள்ளூர் மாவட்டத்திற்கு நவம்பர் 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அன்றைய நாளில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.