2019ம் ஆண்டு 8,888 போலீஸ் பணியிடங்கள் தேர்வில் முறைகேடு – தேர்வுப்பட்டியல் நிறுத்திவைக்கப்பட்ட உத்தரவு ரத்து..!

0

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 போலீஸ் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக அளிக்கப்பட்ட புகாரினால் அதற்கான தேர்வுப்பட்டியலை நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள்..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 8,888 பணியிடங்களுக்கான (இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன் மற்றும் தீயணைப்புத் துறையினர்) தேர்வில் ஒரு குறிப்பிட்ட தனியார் தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளதாக உயர்நீதி மன்றத்தில் தேர்வர்கள் 15 பேர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் இது குறித்து சிபிஐ விசாரணை தேவை எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தேர்வுப் பட்டியல் நிறுத்திவைப்பு..!

மேலும், கடந்த பிப்ரவரி 2ம் தேதி இந்த தேர்வுக்கான தற்காலிக தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வேலூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 1019 பேரும், விழுப்புரத்தில் இருந்து 763 பேரும் தேர்வாகி உள்ளனர். மீதமுள்ள மாவட்டங்களில் தேர்வு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இது குறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உரிய விளக்கமளிக்க உத்தரவிட்டார். மேலும் அதுவரை தேர்வு நடைமுறைகள் எதுவும் நடைபெறக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.

புதிய தீர்ப்பு..!

நீதிபதி தீர்ப்பினை எதிர்த்து நீதிமன்றத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் ஆணையம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் வாதத்தை ஏற்றுக் கொண்டு நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here