2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இப்போது குவியும் மக்கள்., கூலிக்காக மாற்றுகிறார்களா? அதிர்ச்சி தகவல்!!!

0

நாடு முழுவதும் அனைத்து வங்கி கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை அக்டோபர் 7ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது. இந்த 4 மாத கால அவகாசத்திற்கு பின்னர் ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மட்டுமே மாற்றிக்கொள்ளலாம் என அண்மையில் கூறி இருந்தனர். இந்நிலையில் ஒடிசாவில் பொதுமக்கள் பலரும் கூலிக்காக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருவதாக ஊடகங்களில் செய்தி பரவியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், பெரும்பாலானோர் சரியாக அனுமதிக்கப்பட்ட பத்து 2000 ரூபாய் (ரூ.20,000) நோட்டுகளை மட்டுமே கொண்டு வந்துள்ளனர். இதில் 95 சதவீதம் பேர் பணமாகவும், 5 சதவீதம் பேர் மட்டுமே தங்களது வங்கி கணக்கில் பணத்தை பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அதேபோல் கொல்கத்தா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் மக்கள் கூட்டம் குவிந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதால், பலர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here