TNPSC Group 4 தேர்வில் வந்த புதிய சர்ச்சை.., முற்றுப்புள்ளி வைத்த நிறுவனர்!!

0
TNPSC Group 4 தேர்வில் வந்த புதிய சர்ச்சை.., முற்றுப்புள்ளி வைத்த நிறுவனர்!!
TNPSC Group 4 தேர்வில் வந்த புதிய சர்ச்சை.., முற்றுப்புள்ளி வைத்த நிறுவனர்!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற TNPSC Group 4 தேர்வுக்கான ரிசல்ட் மார்ச் 24 ஆம் தேதி வெளியானது. ஆனால் இந்த தேர்வு முடிவுகள் பலருக்கு வரவில்லை என்றும், குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் தேர்வர்கள் புகார் அளித்து வந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் சமீபத்தில் TAF என்ற கோச்சிங் சென்டர் “Group 4 தேர்வில் ஒரே மையத்தை சேர்ந்த 2000 பேர் தேர்வு, நீங்களும் இந்த மையத்தில் பயிலுங்கள். தேர்ச்சி பெறலாம்” என்ற விளம்பரத்தை வெளியிட்டது. அதன் பின் இந்த விளம்பரம் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது.

மேலும் இதற்கு பலரும் எப்படி ஒரே மையத்தில் 2000 பேர் தேர்ச்சி பெற முடியும்?? இது எப்படி சாத்தியமாகும் என சரமாரி கேள்வி எழுப்பினர். இந்நிலையில் TAF கோச்சிங் சென்டரின் நிறுவனர் விளக்கமளித்துள்ளார். அவர், நாங்கள் கூறிய இந்த விளம்பரம் இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறும் என்று தெரியவில்லை.

ஐஸ்வர்யாவை தொடர்ந்து விஜய் யேசுதாஸ் வீட்டிலும் நகைகள் கொள்ளை.. போலீசார் விசாரணை!!

நாங்கள் 2000 பேர் தேர்ச்சி என்று கூறியது உண்மைதான். ஆனால் தமிழகத்தில் உள்ள 52 கோச்சிங் சென்டரில் படித்த மொத்த மாணவர்களை சேர்ந்து தான் 2000 பேர் என்று கூறினோம். மேலும் ஒவ்வொரு சென்டரில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களின் முழு விவரத்தையும் நாங்கள் வைத்துள்ளோம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் விளக்கம் அளிக்கவும் தயாராக உள்ளோம் என்று நிறுவனர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here