
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே 19ம் தேதி அறிவித்தது. இதன்படி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் ரூ.2,000 நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். இதன் காரணமாக அனுதினமும் வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் பெரும்பாலான வங்கிகளில் ரூ.500 உள்ளிட்ட மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இதுவரை 20 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெற்ற நிலையிலே தட்டுப்பாடு பிரச்சனை எழுந்துள்ளது என பலரும் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் ரூ.500 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வந்துள்ளதாக மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் உயரும் மின் கட்டணம்?? வெளியான முக்கிய தகவல்!!
அதாவது ரிசர்வ் வங்கி இதுவரை அச்சடித்த ரூ.500 நோட்டுகளை விட 20 சதவீதம் கூடுதலாக புழக்கத்தில் உள்ளது என தகவல் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக இந்திய பொருளாதாரம் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர். இதுபோன்ற பிரச்சனைகளை ரிசர்வ் வங்கி எப்படி கையாள உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.