பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தா? மாவட்ட முதன்மை அலுவலர்களுடன் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!!

0
பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தா? மாவட்ட முதன்மை அலுவலர்களுடன் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!!
பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்தா? மாவட்ட முதன்மை அலுவலர்களுடன் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!!

இனி வரும் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா என்பது குறித்து இன்று பள்ளி கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு

தமிழகம் மற்றும் புதுவையில் தற்போது 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து ஏப்ரல் 6 ஆம் தேதி 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா என கேள்விகள் எழுந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது தமிழகத்தில் கடந்த 2017 – 18 ஆம் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அமல்படுத்தப்பட்டது. இதன் பிறகு மாணவர்களின் கல்வி திறன் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய தான் தொடங்கியது.

இதற்கு காரணம் என்னவென்றால் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் இனி வரும் கல்வி ஆண்டில் படிப்பை பாதியிலே நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.

மனுசனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.., பாலய்யாவின் 108வது படத்தில் 2 ஹாட் ஹீரோயின்ஸ்.., வெளியான அப்டேட்!!

இதனால் இதை சரிசெய்ய 11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தேவையா என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடன் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தின் முடிவில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here