தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களே.., இதை உடனே செய்ய வேண்டும்.., கல்வி இயக்குநர் பிறப்பித்த உத்தரவு!!!

0
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வகுப்புகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு செயல்படும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தனர். தற்போது இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை தவிர மீதமுள்ள பாடங்களுக்கு கூடுதலாக 114 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த 114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய பணியிடங்களை பள்ளியின் அளவை பதிவேட்டில் பதிவு செய்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பராமரிக்க வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here