தமிழக மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் குறைப்பு – கல்வித்துறை அறிவிப்பு!!

0

தற்போது அடுத்த சில மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு பொத்துத்தேர்வு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பொதுத்தேர்வு:

கடந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் கொரோனா காலங்களில் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்று வந்தனர். தற்போது பொதுத்தேர்வுக்கான காலம் நெருங்கியுள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் வெளியானது. இதனை முன்னிட்டு தமிழக அரசு பெற்றோர்களிடம் அனுமதி கேட்டது. பெற்றோர்களும் பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 19ம் தேதி அன்று 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாடத்திட்டங்கள் குறைப்பு:

தற்போது பொத்துத்தேர்வுக்கு குறைந்த காலங்களே இருக்கும் நிலையில் பாடங்கள் குறைக்கப்படுமா என்று மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்த்து வந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பின் படியே பாடத்திட்டங்களில் 40 சதவீதத்தை குறைத்துள்ளது அரசு. இது குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பொதுத்தேர்வில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் அனைவரின் ஆசைக்கேற்ப எளிய முறையில் தேர்வுகள் இருக்கும்.

அதிகரிக்க தொடங்கும் தங்க விலை – பீதியில் மக்கள்!!

இதற்காக முதல்வரிடம் அனுமதி கேட்டுள்ளோம். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூரவமான அறிவிப்பு வெளிவரும். மேலும் 11ம் வகுப்புக்கான பாடத்திட்டமும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றிய தகவல்கள் அனைத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டது. தற்போது அடுத்த கட்டமாக 9 மற்றும் 11ம் வகுப்புக்கான பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வரிடம் கேட்டுள்ளோம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here