70% ஏழைகளை விட 1% பணக்காரர்களின் சொத்து 4 மடங்கு அதிகம் – இந்தியா ஆய்வில் அதிர்ச்சி

0
Rich Vs Poor

சுவிற்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு (WORLD ECONOMIC FORUM) நடைபெறுவதை தொடர்ந்து ‘டைம் டு கேர்’ எனும் தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் இந்தியாவில் உள்ள 70% ஏழைகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பைவிடவும், வெறும் 1% பணக்காரர்களின் சொத்து 4 மடங்கு அதிகம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்

அளவுக்கு மீறிய சொத்து

உலக மக்கள் தொகையில் 60 சதவீத அடித்தட்டு மக்களுக்கு தேவைப்படும் நிதியை காட்டிலும், வெறும் 2 ஆயிரத்து 153 பணக்காரர்கள் அதிகளவிலான சொத்துக்களை வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பூமியில் வாழும் மக்களில் 460 கோடி மக்கள் என்பது 60 சதவீதமாகும். இந்தியாவில் 2018 – 2019ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 63 கோடீஸ்வரர்கள் அதிக சொத்துக்களை வைத்திருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Image result for telegram logo

டெலிகிராம் சேனலில் சேர இங்கே கிளிக் செய்யவும்

சம்பளம் பெறாமல் வேலைகள்

இந்தியாவில் ஏராளமான பெண்களும், சிறுமிகளும் பல வீட்டு வேலைகளையும், குழந்தைகள் மற்றும் முதியவர்களை பராமரிக்கும் பணியிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் சமூகத்தின் நகர்வுக்கு இவர்களது பெரும்பணியே அடிப்படை ஆதாரமாக இயங்கி வருகிறது.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தொடர இங்கே கிளிக் செய்யவும்

இவ்வாறு அதிக நேரத்தை ஊதியமில்லாத வேலைகளைச் செய்யும் பெண்களுக்குக் கிடைக்கும் ஒரு சிறிய நேரத்தில் ஏதேனும் படிக்க வைத்து அல்லது வேலைக் கற்றுக் கொடுத்து ஒரு குறைந்தபட்ச வருமானத்தை ஈட்டும் வகையில் அரசுகளால் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டால் தற்போதைய பொருளாதார மாற்றங்களால் கிடைக்கும் பயன்கள் அவர்களுக்கும் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here