வர்றியா நீயா நானான்னு பாத்துருவோம் – கிரிக்கெட்டுடன் நேருக்கு நேர் மோதிய WWE..!

0

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கிரிக்கெட் போட்டிகள் உட்பட பல போட்டிகள் தடைபட்டுள்ளன. இந்நிலையில் முக்கிய போட்டிகளை ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சிகள் திணறி வருகின்றனர்.

ஒளிபரப்பில் சிக்கல்..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாததால் கிரிக்கெட் போட்டிகளை மட்டுமே முக்கியமாக ஒளிபரப்பி வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி திணறி வந்தது. மேலும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 2020 ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது.

முக்கிய போட்டிகள்..!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தள்ளிப் போனதால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சிக்கலில் இருந்தது. மக்களை ஈர்க்க பழைய போட்டிகளை ஒளிபரப்பத் துவங்கியது அதிலும் சிறந்த போட்டிகளை ஒளிபரப்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதியை கொண்டாடும் வகையில் 2011 உலகக்கோப்பை இந்தியா – இலங்கை போட்டியையும் அதற்கு முன் தினம் இந்தியா – பாகிஸ்தான் போட்டியையும் ஒளிபரப்பியது.

WWE நிகழ்ச்சிகள்..!

WWE ரசிகர்கள் இல்லாத அரங்கில் தொடர்ந்து புதிய நிகழ்ச்சிகளை நடத்தி சோனி டென் ஒளிபரப்பி வந்தது. இந்த ஊரடங்கு உத்தரவால் கிரிக்கெட் போட்டிகள் நடக்காததை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டது சோனி டென் தொலைக்காட்சி.

ஏப்ரல் 1 முதல் WWE பிளாக்பஸ்டர் என்ற நிகழ்ச்சியை தொடங்கி பழைய சிறந்த ரெஸ்லிங் போட்டிகளை ஒளிபரப்பத் துவங்கியது. சுமார் 30 ஆண்டு கால போட்டிககளை ஒளிபரப்பி வருகிறது.

பார்வையாளர்கள் எண்ணிக்கை உயர்வு..!

இந்தியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை கண்காணித்து வரும் பார்க் நிறுவனம் இந்த ஆண்டின் 12வது வாரத்தை விட 13வது வாரத்தில் விளையாட்டு சேனல்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 21 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டின் 13வது வாரத்தில் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் சேனல்களில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பர்ஸ்ட் முதல் இடத்திலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி இரண்டாம் இடத்திலும் உள்ளன. சோனி டென் 1 மூன்றாம் இடத்தில் உள்ளது. சோனி டென் 3 மூன்றாம் இடத்திலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here