ஊரடங்கை நீட்டித்தால் ஒரு குடும்பத்திற்கு ரூ. 2000 – பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வரின் கோரிக்கைகள்..!

0

பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் இன்று அனைத்து மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உள்ளார்.

முதல்வரின் கோரிக்கைகள்:

தமிழகம் தான் இந்திய அளவில்அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரைக்கும் 911 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் 9 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரதமர் மோடி அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உள்ளார்.

  • தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ. 1000 கோடி தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி அவர்கள் கோரிக்கை வைத்து உள்ளார்.
  • தமிழக வேளாண்மைத்துறைக்கு சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
  • ரயில் மற்றும் விமான போக்குவரத்தை தற்போதைக்கு மீண்டும் துவங்கக்கூடாது.
  • அத்தியாவசிய பொருட்களான பருப்பு, அரிசி போன்றவை தடையின்றி கிடைக்கும் வகையில் ரயில் மற்றும் சரக்கு லாரிகளின் சுமூக போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.
  • ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் ஒரு குடும்பத்திற்கு 2000 ரூபாய் வழங்கப்பட வேண்டும்.
  • மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது.
  • மாஸ்க்குகள், வெண்டிலெட்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 3000 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் 2020-21ம் ஆண்டிற்கான நிதியை விடுவிக்க வேண்டும்.
  • ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு நிதி வழங்க கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
  • அம்மா உணவகம் மூலம் தினமும் 6 லட்சம் பேருக்கு உணவு வழங்கி வருகிறோம் எனவும் முதல்வர் தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here