WPL 2024 : ஹர்மன்பிரீத் கவுர் அதிரடி..  5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி!!

0
WPL 2024 : ஹர்மன்பிரீத் கவுர் அதிரடி..  5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி!!

மகளிர் பிரிமியர் லீக் தொடரின் 2வது சீசன் கடந்த பிப்ரவரி 23ம்  தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முக்கிய போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்ஐயோ.., எனக்கு அப்படிப்பட்ட பையன் தான் வேணும்.., ஓப்பனாக பேசிய பிக் பாஸ் ஜனனி!!!

அதிகபட்சமாக தனுஜா 26 ரன்களுக்கும், கேத்தரின் 25 ரன்களுக்கும் குவித்தனர். இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. இந்த அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். ஆனாலும் அடுத்து வந்த கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் பொறுப்பாக விளையாடிய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம் 18.1 ஓவரில் 129 ரன்கள் குவித்த மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here