உலகின் மிக உயர்ந்த ஹோட்டல் அதும் எங்கு தெரியுமா??  – அசர வைக்கும் புகைப்படங்கள் உள்ளே!!!

0

உலகின் மிக உயரமான உணவகம் ,ஷாங்காய் டவரில் திறக்கப்பட்டு உள்ளது. அதாவது உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய கோபுரம்  ஷாங்காய் கோபுரம் . அந்த கோபுரத்தில் உலகின் மிக உயரமான அனைத்து வசதிகளுடனும் கூடிய ஜே ஹோட்டல் திறக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் உள்ள ஷாங்காய் கோபுரம் உலகத்தில் இரண்டாவது மிகப்பெரிய கோபுரம் ஆகும். இந்த கோபுரம் ஏறக்குறைய 2000 அடி உயரம் கொண்டது. மேலும் இது  தோராயமாக 120க்கும் மேற்பட்ட மாடிகளை கொண்டது. இந்த கோபுரம் துபாயில் உள்ள  புர்ஜ் கலீஃபாவுக்குப் கட்டத்திற்கு பிறகு உலகின் இரண்டாவது மிக உயர்ந்த  கட்டிடம் ஆகும். இந்த டவரில் மிக உயர்ந்த உணவகமான ஜெ ஹோட்டல் அந்த கோபுரத்தின் 120 வது மாடியில் புதிதாக திறக்கப்பட்டு  உள்ளது.

மேலும் இந்த ஹோட்டலில் சிறப்பம்சங்கள் நிறைய உள்ளன . அதாவது, ஏழு உணவகங்கள் , பார்கள், ஸ்பா ஒன்று மற்றும் உயர்தர ஹோட்டல்களில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் அடங்கும். மேலும் இதில் 84 வது மாடியில் ஒரு நீச்சல் குளமும் உள்ளது. மேலும் பகல் ,இரவு என இல்லாமல் 24 மணி நேரமும் இதன் அனைத்து  சேவைகளும் வழங்கப்படுகிறது. இவ்வளவு வசதிகள் அதுவும் உலகின் புகழ் பெற்ற இடத்தில் இப்படி இருக்கையில்  அந்த வசதிகளை அனுபவிக்க வசூலிக்கப்படும் தொகையும் மிக அதிகமே.

மேலும் இந்த ஹோட்டல் சீனா அரசுக்கு சொந்தமான ஒரு முக்கிய குழுவான ஜின் ஜியாங் சர்வதேச ஹோட்டலின் ஒரு பகுதியாகும். இது குறித்து அந்த அரசின்  விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குனர் ரெனீ வு கூறியதாவது, கொரோனா காரணமாக இந்த ஹோட்டல் திறப்பு தள்ளிப் போனதாக கூறியுள்ளார். மேலும் இந்த ஹோட்டலுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இது மிகுந்த ஊக்கத்தை  தருவதாக உள்ளது. எனினும் அவர்களை நன்கு கவனிப்பதையே நாங்கள்  உறுதியாக கொண்டு  உள்ளோம் என்று கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here