உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2023: லக்ஷ்யா சென், HS பிரணாய் முன்னேற்றம்…, பி வி சிந்து ஏமாற்றம்!!

0
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2023: லக்ஷ்யா சென், HS பிரணாய் முன்னேற்றம்..., பி வி சிந்து ஏமாற்றம்!!
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2023: லக்ஷ்யா சென், HS பிரணாய் முன்னேற்றம்..., பி வி சிந்து ஏமாற்றம்!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள ராயல் அரங்கில் ஆகஸ்ட் 21 முதல் 27 வரை நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியாவின் பி வி சிந்து, HS பிரணாய், லக்ஷ்யா சென் உள்ளிட்டோர் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர். இதில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், தென் கொரியாவின் ஜியோன் ஹியோக்-ஜின் எதிர்த்து லக்ஷ்யா சென் போட்டியிட்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த போட்டியில், ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய லக்ஷ்யா சென் 21-11, 21-12 என்ற செட் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றார். இவரை தொடர்ந்து, இந்தியாவின் HS பிரணாய், இந்தோனேஷியா சிகோ ஆரா த்வி வார்டோயோவை 21-9, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தி உள்ளார். இதன் மூலம், லக்ஷ்யா சென் மற்றும் HS பிரணாய் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் பி வி சிந்து ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவிடம் 14-21, 14-21 என்ற புள்ளி வித்தியாசத்தில் வீழ்ந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற தவறினார்.

சர்வதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் திடீர் மரணம்…, அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here